தற்கொலைக்கு முன்பு அங்கு சென்று வந்த சிம்ரனின் தங்கை.. மரணத்திற்கு காரணமானவர்கள் பற்றி வெளியிட்ட சிம்ரன்…!!

நடிகை  மோனல்

நடிகை  மோனல் நாவல் 2000 காலகட்டத்தில் இந்திய திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  இவர் பிரபல நடிகை சிம்ரனின் தங்கை ஆவார். இவர் தனது அறிமுக படமான பத்ரி  படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடான குணாலுடன் இணைந்து நடித்த பார்வை ஒன்றே போதுமே படத்தின் மூலம் பிரபலமானார். இவர் மேலும் சில படங்களில் தோன்றினார். ஆனால்  பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றிகளையே பெற்று தந்தன.

தற்கொலைக்கு முன்பு அங்கு சென்று வந்த சிம்ரனின் தங்கை..மரணத்திற்கு காரணம் அந்த பிரபல நடிகையா? | Monal Naval Death Reason

   

அப்போது பிஸி நடிகையாக வலம் வந்த சமயத்தில்,  2002 -ம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டார். அவர் தற்கொலை செய்யும் போது, அவருக்கு வெறும் 21 வயதுதான்.

தற்கொலைக்கு முன்பு அங்கு சென்று வந்த சிம்ரனின் தங்கை..மரணத்திற்கு காரணம் அந்த பிரபல நடிகையா? | Monal Naval Death Reason

மரணத்திற்கு காரணமானவர்கள்

இது திரையுலகை அதிர்ச்சி அடையவைத்த நிலையில், மோனல் நாவல் மாரணத்திற்கு காரணம் நடன இயக்குநர் பிரசன்னா சுஜித் என்பவர் தான் என்றும் இதில் நடிகை மும்தாஜின் பங்கும் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை பற்றி சிம்ரன் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், தற்போது வரை மோனல் நாவல் மரணம் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது. இதில் தற்கொலை செய்துகொள்ளும் அன்று மோனல் நாவல், தனது படத்தின் பூஜையில் பங்கேற்றிருந்தார் என்று கூறியிருந்தார்.