நடிகை சாக்ஷி அகர்வால்
பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார். சாக்ஷி நடிப்பதைத் தவிர, பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்…
இவரது திருமணமானது 2011 இல் சென்னையில் மிகவும் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் நடந்தது. ஆனால் இந்த இணையர் பின்னர் அறியப்படாத காரணங்களுக்காக பிரிந்தனர் என்று கூறப்படுகிறது. இவர் தமிழில் காலா, விஸ்வாசம்,ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.
கவர்ச்சி போட்டோ ஷூட்
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வாரம் முழுவதும் விதவிதமான போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். எனவே இந்த புகைப்படங்களை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனை போல் கோவாவில் உள்ள கடற்கரை ஒன்றில் படுகிளாமர் உடையில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை எடுத்து, அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்,