மாரிமுத்து மரியாதை குடுக்க மாட்டார்… என்னிடம் வந்து அழுவார்… மனம் திறந்த சிங்கமுத்து…!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து, ஆரம்ப காலகட்டத்தில் சில திரைப்படங்களும் இயக்கியிருக்கிறார். எனினும், எதிர்நீச்சல் தொடர் மூலமாக தான் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இளைஞர்கள் மத்தியிலும், பிரபலமடைந்த மாரிமுத்து, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

   

அவரின் மறைவுக்கு பிறகு, அத்தொடரில் அவர் நடித்த கதாபாத்திரத்தை இன்று வரை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. இந்நிலையில், நடிகர் மாரிமுத்து குறித்து நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பழைய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகர் மாரிமுத்து மிகவும் கஷ்டப்பட்டவர்.

அவருக்கு கோபம் அதிகமாக வரும். மனிதர்களிடம் மரியாதை இல்லாமல் பேசி விடுவார். அதன் பிறகு இப்படி பேசி விட்டேன் என்று அழுவார். அவரிடம் கோபத்தை குறையுங்கள் என்று கூறியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் அவர்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக ஏழாயிரம் ரூபாய் கொடுப்பேன்.

அதை வாங்குவதற்காக என் வீட்டிற்கு வந்து விடுவார். இரண்டு வருடங்களாக அவர் வரவில்லை. நான் இப்போ நல்ல சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். காசு இருக்கிறது என்று என்னிடம் கூறினார். ஆனால் அவரின் கோபம் மட்டும் குறையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.