மீண்டும் அப்பாவான நடிகர் சிவகார்த்திகேயன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவர் வெள்ளித்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுக்கு ஒருவராக  வலம் வருகிறார் .இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. தற்போது இவர் அமரன் மற்றும் எஸ் கே 23 என்ற இரண்டு படங்களின் நடித்து வருகிறார்.

   

இயக்குனர் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.சமீபத்தில்  இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதில் ராணுவ வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மாமன் மகளான ஆர்த்தி என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதை அறிந்த ரசிகர்கள்  பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.