தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி. சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பிறகு குறும்படங்கள் நடித்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘புகைப்படம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து இவர் தமிழில் ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுக் கொண்டார்.அது தொடர்ந்து மகாராஜா, கலகலப்பு ,சேட்டை, சகலகலா வல்லவன், இறவி ,எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது அஞ்சலி தெலுங்கு திரைப்படமான ‘கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற படம் வரும் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அஞ்சலி பேசினார்.
அதில் திருமணம் குறித்த கேள்வி எழுப்ப பட்டது அதற்கு அஞ்சலி இணையத்தில் எனக்கு கிட்டத்தட்ட நான்கு முறை திருமணங்கள் செய்து வைத்து விட்டார்கள். இது போன்ற வதந்திகள் வரும் போது எல்லாம் வீட்டில் உள்ள அனைவரும் கஷ்டப் பட்டார்கள். ஆனால் அது சில நாட்கள் மட்டுமே பரபரப்பாக இருக்கும். இப்போது எல்லாம் எனக்கு திருமணம் என்ற செய்தி வந்தால் யாரும் கண்டுகொள்வதில்லை.நான் காதலிக்கிறேன் என ஒரு பையனை கூட்டி கொண்டு சென்றால் என் பெற்றோரே நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.