54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வின் காதலி யார் தெரியுமா?…  இதோ அவரே கூறிய பதில்…

கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர்  எஸ் ஜே சூர்யா. இவரின் முதல் படைப்பாக திரையுலகில் வெளிவந்த திரைப்படம் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த ‘வாலி’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

   

இதைத் தொடர்ந்து இளைய தளபதி விஜயை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். மேலும் அவர் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான நியூ என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை இவர் இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே ஹீரோவாகவும் களமிறங்கினார். நயன்தாராவுடன் கள்வனின் காதலி, நியூட்டனின் மூன்றாம் விதி, திருமகள், வியாபாரி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

ஹீரோவாக மட்டுமல்லாமல் மெர்சல் திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு இணையான ஒரு வில்லன் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இதைத் தொடர்ந்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, நடிகர் சிம்புவுடன் மாநாடு மற்றும் சிவகார்த்திகேயனுடன் டான் என வரிசையாக தன் நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார் எஸ் ஜே சூர்யா.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது .தற்போது 54 வயதாகும் எஸ் ஜே சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ‘தான்  சினிமாவை தான் காதலிப்பதாகவும், படங்கள்தான் முக்கியம்’ என்றும் கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா.