பிரபல சீரியல் நடிகர் ஷியாம் இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?… அட இப்படி மாறிட்டாரே… வைரலாகும் வீடியோ…

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றதோ, அதைப்போலவே சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷியாம். இவர் கோலங்கள் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார்.

   

இதை தொடர்ந்து தென்றல், மாயா, சரவணன் மீனாட்சி 2, மரகதவீணை உள்ளிட்ட பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் வலம் வந்து கொண்டுள்ளார். இரும்பு திரைப்படத்தின் இயக்குனர் பி எஸ் மித்ரன், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய  ‘ஹீரோ’ திரைப்படத்தில் வரும் சிங்கிள் ட்ராக்  பாடலை நடிகர் ஷியாம் பாடியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இவரது குடும்பமே கலைக்குடும்பம் என்று கூறலாம். இவரது மூத்த மகள் நிவாஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து இவரது இளைய மகள் ரக்ஷா ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகர் சியாம். இவர்  தற்பொழுது தனது மகளுடன் இணைந்து பாடும் அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.