50 வயதில் இரண்டாவது திருமணமா? வேணும் ஆனா வேண்டா… நடிகை சுகன்யா ஓபன் டாக்…!!

நடிகை சுகன்யா

பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பிரபலங்கள் பலர், அப்படி அவரால் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை சுகன்யா, 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். இவர் தனது திறமையான நடிப்பால் பெரிய ரீச் பெற்று, விஜயகாந்தின் சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் இந்தியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

Suganya Photos [HD]: Latest Images, Pictures, Stills of Suganya - FilmiBeat

   

50 வயதில் இரண்டாவது திருமணமா? நடிகை சுகன்யாவின் அதிரடி முடிவு - மனிதன்

மேலும் 1990களில் தமிழ் திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகையான குஷ்பூவிற்கும்–சுகன்யாவிற்கும் பலமான போட்டி அக்காலட்டத்தில் தமிழ் திரையுலகில் நிலவியது. சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

முதல்முறையாக டியூன் போட்டு பாட்டு எழுதிய முன்னாள் தமிழ் ஹீரோயின்! - தமிழ் News - IndiaGlitz.com

இவர் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட  பின், அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக 1 ஆண்டிலேயே விவாகரத்து செய்து பிரியும் நிலை ஏற்பட்டது. விவாகரத்திற்கு பின்னர் தனியாகவே வாழ்ந்து வந்தார். தற்போது சுகன்யாவிற்கு 50 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், அவரிடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.

50 வயதில் இரண்டாவது திருமணமா? நடிகை சுகன்யாவின் அதிரடி முடிவு - மனிதன்

அதற்கு அவர் கூறியதாவது, அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை  என்று கூறினார். மேலும் இவரது வீட்டில் வேலைகள் எல்லாம் செய்வதற்கு ஆள் வைக்காமல் தனியாக செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது நடிகை சுகன்யாவின் அன்னையை பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சந்தித்துள்ளதாகவும் அப்போது செல்போன் கடையில் வைத்துப் பார்த்ததாகவும் அந்த கடையில் பழைய போனை ரிப்பேர் செய்ய கொடுத்ததாகவும் தெரிகிறது இப்போது நான் வருடம் கேட்டேன் புது போன் வாங்கலாம் என அவர் எதற்கு நான் போன் பேசியதற்காக மட்டுமே வைத்துள்ளேன் என்று கூறினார் இவ்வாறு மிகவும் எளிமையாக நடிகை சுகன்யா வாழ்வதாகவும் அந்த பேட்டியில் பயில்வான் தெரிவித்துள்ளார்.