பாதுகாப்பை தாண்டி தமன்னா கையை பிடித்த நபர்.. என்ன நடந்தது பாருங்க! – வெளியான வீடியோ..!

நடிகை தமன்னா

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியான நாயகியாக வலம் வந்த தமன்னா, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் அவரது காதல் விவகாரம் ஒருபக்கம் வைரல் ஆன நிலையில், அதாவது ஹிந்தி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருகிறார் என கிசுகிசுக்கள் வெளியாகியது.

Tamannaah Bhatia to Sizzle with Rajinikanth in Jailer's First Single 'Kaavaalaa

   

பின்னர் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் உள்ள “காவாலா” என்ற பாடலுக்கு அவர் ஆடி இருந்த டான்ஸ் வீடியோ சோசியல் மீடியாக்களில் அதிகம் ட்ரெண்ட் ஆகியது. மேலும் அடுத்து அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி-யில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

தமன்னாவிடம் அத்துமீறிய நபர்

இந்நிலையில் நடிகை தமன்னா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஒரு நபர் பாதுகாவலர்களை தாண்டி வந்து, அவரது கையை பிடித்துவிடுகிறார். பின்னர் காவலர்கள் அந்த நபரை பிடித்து வெளியில் அனுப்ப, தமன்னா அவர்களை தடுத்து நிறுத்தினார். பின் அந்த இளைஞருக்கு கைகொடுத்து, அதன் பின் செல்பி எடுத்து கொண்டு அனுப்பி வைத்திருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,