
நடிகை திரிஷா
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்து வரும் நடிகை திரிஷா சாமி, கில்லி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். தற்போது விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார். அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள இப்படம் மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தமன்னா அந்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து, திரிஷா 96 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிலையில், இப்படத்தில் இவர்கள் இருவருக்குமிடையே லிப்லாக் காட்சி இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு நடிகை திரிஷாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் ஆனால் விஜய் சேதுபதி கண்டிப்பாக இந்த காட்சியில் நடிக்க முடியாது என்றும் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த படத்தில் அப்படி ஒரு காட்சியை படக்குழு நீக்கியதாக கூறப்படுகிறது.