
திவ்யா
தமிழ் சினிமாவில் சிலம்பு நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. இவரது இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா. மேலும் இவர் கிரி, பொல்லாதவன், சிங்கம் புலி, வாரணம் ஆயிரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். திவ்யா கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நிலையில், தமிழில் 12 ஆண்டுகளாக பட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், 2013ஆம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்.
இவருக்கு 40 வயதாகிறது. ஆனால் திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி பரவி, இந்திய சினிமாவையே அதிரவைத்தது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தொடங்கினர். ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும் அவரிடம் நான் தற்போது பேசினேன் என்றும் அவரின் தோழியும் பிரபல பத்திரிகையாளருமான சித்ரா கூறியுள்ளார்.
மேலும் ஜெனிவாவில் திவ்யா நன்றாக இருப்பதாகவும், விரைவில் நம்ம ஊரில்(பெங்களூரில்) சந்திப்போம் என்றும் டிவிட்டர் பதிவில் டிவிட் பதிவிட்டுள்ளார். இதோ,
????????♥️♥️ See you in namma uru soon!
— Ramya/Divya Spandana (@divyaspandana) September 6, 2023