எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த கதையில் வரும் குணசேகரன், ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் செய்து, அது வேறொரு பிரச்சனையை அவருக்கு ஏற்படுத்தியது.
இப்போது தனது மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி என்பதை தெரிந்துகொண்டவர் அடுத்த பிரச்சனையை கிளப்பி, ஈஸ்வரியை வெட்டிவிட முடிவு எடுத்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குள் கெத்தாக நுழைகிறார் எனவும் அடுத்து என்ன நடக்கப்போகிறது எனவும் தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
நடிகர் சக்தி
இந்த சீரியலில் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு துணை போகாமல் தைரியமாக பேசி வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நடித்து வரும் சக்தி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இவரது நிஜ வாழ்க்கையில் கார்த்திகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.