அம்மாடி!… இத்தனை கோடியா?… ‘மாமன்னன்’ படத்திற்காக நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க…

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் மாரி  செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் ,கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலர்  நடித்துள்ளனர்.

   

இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தற்பொழுது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்’ மாமன்னன்’ தான் தனது கடைசி படம் எனக்கு அறிவித்துவிட்டார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது . தற்பொழுது இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.

இப்படத்தில் வடிவேலுவும் ஹீரோவிற்கு நிகரான ஒரு ரோலில் நடித்துள்ளார். இதுவரை வடிவேலு நடிக்காத வித்தியாசமான ரோலில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பதால் ரசிகர்களும் ஆர்வமாக படத்தை காண்கின்றனர். இப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து அவருக்கு நல்ல வாய்ப்புகள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவிற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக வடிவேலு ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். இப்படத்தில் மாமன்னனே வடிவேலு தான் என்பதால் அவருக்கு அதிகமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.