தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் வித்யா பிரதீப்.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் மலையாளம் மற்றும் தமிழ் முதலிய பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் முதன்முதலில் சைவம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது 2014 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி பதித்தார்.
இதையடுத்து பசங்க 2 மற்றும் அருண் விஜயின் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது 32 வயதாகும் வித்யா பிரதீப் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
நடிகை, மாடல் மட்டும் அல்லாமல் ஒரு ஆராய்ச்சியாளராகவும் பயோ டெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக வித்யா பிரதீப் இருக்கிறார்.
பின்னர் தமிழில் இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாறி 2, தடம் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளர்.
மேலும் இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாகியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கண்ணகி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வரும் வித்யா பிரதீப் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.