உயிர் நண்பனின் இறப்பு… சோகமே உருவாக நின்ற அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். கார் சட்லஜ் ஆற்றின்  அருகில் சென்ற போது, காரை ஓட்டிச் சென்ற தன்ஜின் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கார் கட்டுபாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.

   

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். காரில் பயணித்த வெற்றியின் நண்பரான கோபிநாத்திற்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். வெற்றியின் உடல் பல நாட்களாக தேடப்பட்டு வந்தது.

எனினும், அவரின் உடல் கிடைக்காததால் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தன்மகன் வெற்றி துரைசாமியின் உடலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி சன்மானம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து கடந்த ஆறாம் தேதி அன்று சட்லஜ் நதியின் பாறை இடுக்குகளில் சில மூளை திசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அது வெற்றி துரைசாமியுடையதா? என்று அறிய டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சுமார் 9 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சட்லஜ் ஆற்றிற்கு ஆறு கிலோமீட்டர் தூரத்தில் வெற்றியின் உடலை கண்டுபிடித்துள்ளனர். அவரின் உடலை விமானத்தின் மூலமாக கொண்டு சென்று சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டில் அஞ்சலி செலுத்த வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வெற்றி துரைசாமி நண்பரான அஜித்குமார் தன் மனைவி ஷாலினியோடு அங்கு சென்று நண்பனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். தற்போது, நண்பனின் இறப்பிற்கு சென்ற அஜித் சோகமாக நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.