
கடந்த 1995-ஆம் வருடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் பிரபு நடிப்பில் வெளியான பசும்பொன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் என்ற பாடல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. அதன் பிறகு, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த தளபதியின் லியோ திரைப்படத்திலும் அந்த பாடல் முழுவதையும் பின்னணி இசையில் ஒலிக்க செய்திருப்பார்கள்.
பொதுவாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் 80 மற்றும் 90-களில் வெளிவந்த பாடல்களை பின்னணி இசையில் ஒலிக்க செய்வார். அதிலும், முக்கியமான சண்டை காட்சிகளில் இதமான பாடல்கள் நம் மனதை வருடும். அந்த வகையில், லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற தாமரை பூவுக்கும் பாடலில் நடித்திருந்த நடிகர் விக்னேஷ் பேட்டி ஒன்றில் அது பற்றி தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, நானும் தியேட்டரில் அமர்ந்து லியோ திரைப்படத்தை மக்களோடு பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அந்த பாடல் ஒலித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. எனினும், இரண்டு வரிகள் தான் வரும் என்று பார்த்தால் முழு பாடலையும் ஒலிக்கச் செய்தார்கள். அப்போது ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தார்கள். அவர்களைப் போலவே நானும் சந்தோஷப்பட்டேன். பாடலின் இசையமைப்பாளர் வித்யாசாகர். அந்த பாடலை நாங்கள் மைசூரில் எடுத்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.