‘ரத்தம்’ பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி, மகள் செய்த காரியத்தை பார்த்து ஆச்சிரியத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ …..

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு நடிகராக புது அவதாரம் எடுத்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி அதைத் தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

   

சமீபத்தில் இவரது மூத்த மகளான மீரா செப்டம்பர்19 தேதி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘மீராவுடன் நானும் சேர்ந்து இறந்து விட்டதாக’ அறிக்கையை வெளியிட்டிருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.இந்நிலையில் தனது மகள் இறந்த சில நாட்களில் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘ரத்தம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதை பார்த்த சிலர் விஜய் ஆண்டனியை கட்டாயப்படுத்தி வரவைத்திருக்கிறார்களோ என பேசத் துவங்கினார்கள். ஆனால் அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லையாம். முழு மனதோடு வந்து தான் படத்தை விளம்பரம் செய்திருக்கிறார்.  விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி கண்களில் சோகம் இருந்தாலும் அவரும் அவரது இளைய மகளான லாராகும் ஸ்மைலிங் செய்தார்கள் அதை பார்த்து ரசிகர்களுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.

இவ்வளவு வேதனையிலும் அவர்கள் ஸ்மைலிங் செய்தாலும் அதிலும் வேதனை தெரிகிறது.மகள் இறந்த உடனே விளம்பர நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டாம். நீங்கள் வர வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என அமுதன் கூறியிருக்கலாம். இவ்வளவு சீக்கிரத்தில் அவரை வேலைக்கு வரவழைத்திருக்க வேண்டாம் என்று சிலரும், வேலைக்கு வந்தால் தான் அந்த பாரம் கொஞ்சமாவது குறையும். விஜய் ஆண்டனி செய்தது தான் சரி என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.

ஆளாளுக்கு சி.எஸ். அமுதனை விமர்சித்துக் கொண்டிருக்க அவரே X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அமுதன் கூறியிருப்பதாவது,இந்த படத்தை விளம்பரம் செய்வது எங்களுக்கு முக்கியம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை மற்றும் பலரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அந்த மனிதரே விரும்பும் விஷயம் இருக்கிறது என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,வீட்டோடு முடங்கி சோகமாக இருக்காமல் கவனத்தை திசை திருப்ப விஜய் ஆண்டனியே விரும்பி வந்திருந்தால் சரி. அது அவருக்கு நல்லதும் கூட. அவரை இப்படி பார்க்கும்போது பயமாக இருக்கிறது. எப்படி ஆறுதல் சொல்வது என்றும் தெரியவில்லை.பட நிகழ்ச்சியில் அவர் ஸ்மைல் செய்ததை பார்த்தபோது அதில் இருந்த சோகத்தை பார்த்து கண்ணீர் தான் வந்தது என்கிறார்கள்.


16 வயதே ஆன மீரா இறந்த செய்தி அறிந்த பலரும் அது வதந்தியாக இருக்கக் கூடாதா என்றே நினைத்தார்கள். அதன் பிறகு விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தான் மீரா உயிருடன் இல்லை என்பது தெரிந்து வேதனை அடைந்தார்கள்.  இதற்கிடையே பள்ளி நிகழ்ச்சியில் மீரா கம்பீரமாக நடந்து சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. அதை பார்த்தவர்களோ, விஜய் ஆண்டனிக்கும், அவரின் மனைவி பாத்திமாவுக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என்றார்கள்.