இந்த புகைப்படத்தில் தனது தம்பியுடன் விளையாடும் உலக அளவில் பிரபலமான டாப்  நடிகர் யார் தெரியுமா?…  Guess பண்ணுங்க மக்களே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இதை தொடர்ந்து சமீபத்தில் தளபதி விஜயின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. அதாவது இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மக்கள் இயக்கத்திற்காகவும் நேரத்தை ஒதுக்க கூடியவர். சமீபத்தில் இவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியரை கௌரவித்து, விருது வழங்கி, பரிசு தொகை கொடுத்து ஊக்கப்படுத்தி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது.

தளபதி விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அவரின் சகோதரரான நடிகர் விக்ராந்த் தற்போது இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரும் தானும் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம தளபதியா இது?’ இன்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இதோ அந்த சிறு வயது புகைப்படம்…