அழகை பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்… இதோ சிறப்பு தொகுப்பு..!!

பொதுவாகவே சினிமாவில் ஒரு திரைப்படம் என்றால் காதல் என்பது கட்டாயம் இருக்கும். இதன் காரணமாகவே காதல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.ஆனால் அப்படி சினிமாவில் காட்டுகின்ற காதல் சீன்களைப் போல நிஜ வாழ்க்கையில் செய்து காட்டும் நடிகர் நடிகைகள் சிலர் மட்டுமே உள்ளனர். அப்படி சினிமாவில் அழகை பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை தேவயானி- ராஜ் குமார்:

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயானி தற்போது சின்ன திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிரியா- அட்லீ:

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லி முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி வெற்றியை இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரை நடிகையான பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

கின்னஸ் பக்ரூ – காயத்ரி மோகன்:

இந்தியாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கின்னஸ் பக்ரு. இவர் காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஹரி – பிரீத்தா விஜயகுமார்:

நடிகர் விஜயகுமாரின் மகளான பிரீத்தா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

காதல் சந்தியா – வெங்கட் சந்துரு:

பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சந்தியா. அதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் இவர் வெங்கட் சந்துரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் – கிருஷ்ண வம்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்றும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நஸ்ரியா – பகத் பாசில்:

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நஸ்ரியா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரீமாசென் – சிவா கிரண் சிங்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரீமாசென். இவர் சிவா கிரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

சோனியா அகர்வால் – செல்வராகவன்:

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

முத்து மலர் – பாலா:

இயக்குனர் பாலா கரடு முரடான குணம் உடையவர் என பல கூறியுள்ளனர். இவர் முத்து மலர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுத்தமாக ஜோடி பொருத்தம் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஸ்ரீதேவி – போனி கபூர்:

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தாஸ்:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய உறவினர் பெண்ணான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.