விவாகரத்து கிடைத்ததை ‘பிரேக் அப் பார்ட்டி’ வைத்து  மகிழ்ச்சியுடன் குத்தாட்டம் போட்டு கொண்டாடிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ராக்கி சாவந்த் . தமிழில் ஒரு சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் ஹிந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு முதுகை உடைத்துக் கொண்டது, நடிகை மீது செக்ஸ் புகார் என்று இவர் கிளப்பிய சர்ச்சைகள் ஏராளம்.

   

இவர் ஹிந்தியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 1, சீசன் 14 மற்றும் சீசன் 15 போன்றவற்றில் கலந்து கொண்டார். இவர் கடந்த வருடம் ரிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது கணவர் ரிதேஷ் உடன் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவரை போல ஒரு அற்புதமான கணவர் யாருக்கும் கிடைக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில மாதத்திலேயே தனது கணவரை விட்டு பிரிந்தார். இதைதொடர்ந்து இவர் தனது அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீசில் அளித்தார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தார். தற்பொழுது அவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து கிடைத்ததை தற்பொழுது பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் நடிகை ராக்கி. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .இதோ அந்த வைரல் வீடியோ….