
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவு அடைந்துவிட்ட நிலையில், பேட்ச்வொர்க் என்று சொல்லக்கூடிய இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியானது. மேலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளிவந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியான சூழலில், அதை உறுதிப்படுத்தும் வகையில், லோகேஷ் அவருடைய டிவிட்டர் பயோ-வில் லியோ படத்தை நீக்கி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், பரவி வந்த தகவலை உண்மை தான் என கூறி வருகின்றனர். ஆனால் இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் நடிகர் விஜய் லியோ படத்தின் கதையில் சில மாற்றங்களை கேட்டுள்ளார் என்றும் சில காட்சிகளை கூடுதலாக வைக்க வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ், விஜயுடன் மோதல் ஏற்பட்டு படத்திலிருந்து விலகி கொள்வதாக முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா..? இல்லையா…? என்பது படத்தின் தயாரிப்பு நிறுவனமோ..? அல்லது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அல்லது நடிகர் விஜய் தரப்பிலிருந்து கூறினால் தான் தெரியவரும்.