தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பல நட்சத்திரங்கள், திருமணம் செய்த செய்திகள் வந்ததோ, இல்லையோ நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்திகள் அதிகமாக வந்தது. அந்த வரிசையில் அமலா பால், சமந்தா, தனுஷ் – ஐஸ்வர்யா, பாலா, இமான் போன்ற நட்சத்திரங்களின் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் திருமணமாகி ஒரே மாதத்தில், நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறார் மற்றும் நடிகை சினேகா திருமணமாகி 10 ஆண்டு ஆகும் நிலையில், நடிகர் பிரசன்னாவை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் இருந்தது.
ஆனால் இந்த வதந்தி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை நயன்தாரா மற்றும் சினேகா தங்கள் கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து குறித்த செய்தி பரவி வருகிறது. இதற்கு இருவரும் ஜோடியாக வெளியில் வந்தால் கூட அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் விஜய் அதை செய்யாமல் யோசித்து வருவதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.