
இயக்குனர் தரணி இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது வரை, ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
அத்திரைப்படம் இந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட மிக முக்கிய காரணம், வில்லன் பிரகாஷ் ராஜிடம் இருந்து நடிகை திரிஷாவை விஜய் காப்பாற்றும் காட்சி தான்.
இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த காட்சியாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் படம் வெளிவந்த சமயத்தில் நடிகர் விஜய் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் தரணி கில்லி திரைப்படத்தில் கதாநாயகனும், வில்லனும் சந்திக்கும் காட்சி மீனாட்சியம்மன் கோவில் பக்கத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தார்.
அதற்காக, அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே அந்த பகுதிக்கு சென்று, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு கேமரா, வீட்டினுள் ஒரு கேமரா, காருக்குள் ஒரு கேமரா மற்றும் என்னையும் கதாநாயகியையும் பின்பற்ற நான்கு கார்களில் கேமராக்களை வைத்துவிட்டார். அதன்பிறகு, அந்த காட்சி அழகாக படமாக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.