விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் லிவிங்கில் இருக்கும் விஜய் பட நடிகை..! புகைப்படத்தால் சிக்கிய பிரபலங்கள்..!

விஜய்தேவரகொண்டா- ராஷ்மிகா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர்கள் நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமான கீதா கோவிந்தத்தில் நடித்து பிரபலமாகினர். மேலும் இவர்கள் இணைந்து டியர் காமரேட் படங்களிலும் நடித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் பட நடிகை! புகைப்படத்தில் சிக்கினர் | Vijay Devarkonda And Rashmika Photo Viral

   

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் பட நடிகை! புகைப்படத்தில் சிக்கினர் | Vijay Devarkonda And Rashmika Photo Viral

குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்

பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் சூழலில், ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் லிவிங் உறவில் இருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் இவர்கள் அந்த சர்ச்சைகள் எதற்கும் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை.

மேலும் இருவரும் மாலத்தீவு சென்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தினை  தனித்தனியாக வெளியிட்டனர்.  பின் இணையவாசிகளிடம் அந்த ஒரு போட்டாவின் மூலம் இருவரும் சிக்கிக்கொண்டனர். அந்த புகைப்படமானது ஒரே இடத்தில் இருந்து எடுத்ததை போன்று,இருவர் பின்னால் இருக்கும் சுவர் மற்றும் கார்டன் ஒரே வீடு போல் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

rashmika-and-vijay-deverakonda-in-same-house

இதைத்தவிர நடிகர் விஜய் தேவரகொண்ட தனது இன்ஸ்டா பக்கத்தில், ”நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே ஸ்பெஷல். விரைவில் அறிவிக்கிறேன்” என போஸ்ட் செய்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில்  இவர் ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போல இருந்தது.

மேலும் குஷி படம் வெளியான நேரத்தில் இந்த அறிவிப்பும் வெளியிட்டார். இதனால் பலரும் இவர் சமந்தாவை காதலிப்பதாக நினைத்தனர். ஆனால் அது ராஷ்மிகா தான் என்று நெட்டிசன்களிடையே சந்தேகம் எழுந்து வருகிறது.

rashmika-and-vijay-deverakonda-in-same-house