மேடையில் நடிகை யாஷிகாவை தடவி முத்தம் கொடுத்த பிரபல நடிகர்… முகம் சுளிக்க வைத்த சம்பவம்.. வைரல் வீடியோ இதோ..!!

கூல் சுரேஷ்

2018 இல் ஹரி உத்ரா இயக்கத்தில் “படித்தவுடன் கிழித்து விடவும்” என்ற  திரைப்படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதுவே சுரேஷ் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் ஆகும்.

   

மேலும் நகைச்சுவை ரோலில், காக்க காக்க மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் சில நாள்களுக்கு முன், வெளியான மார்க் ஆண்டனி படத்தினை தியேட்டரில் பார்த்துள்ளார் என்றும் பின் படம் முடிந்து வெளியே வந்த அவர் பாம்பு பொம்மையை கையில் வைத்துக்கொண்டு, விஷாலின் அனகொண்டாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் என்றும் கூறி முத்தம் கொடுத்துள்ளார்.

இதேபோல் நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகவுள்ள சரக்கு படத்தின் இசை மற்றும் திரைக்கண்ணோட்ட வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கூல் சுரேஷ், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலையை போட்டுள்ளார். இதனால் ஷாக்கான அந்த தொகுப்பாளினி முகம் சுளித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு அண்மைகாலமாக நடிகைகள் மற்றும் பெண்களிடம் அத்துமீறி டார்ச்சர் செய்து வருவதாக இவரை பற்றி விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகை யாஷிகா ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், கூல் சுரேஷும் கலந்து கொண்டு, மேடையில் வைத்து அவரது கையை பிடித்து தடவிவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீடியோ இதோ,