எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய கோலங்கள் என்ற சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
ethirneechal serial
இது பெண்களை மையப்படுத்திய கதையாக உருவாக்கப்பட்டு, பெண்களை அடிமைபடுத்தும் ஆண்களுக்கு மத்தியில் தன் சொந்த காலில் நிற்க போராடும் பெண்களை பற்றிய கதையாக இருக்கிறது.
தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் பெரிய அதிர்ச்சியாய் மாரிமுத்து மரணம் இருந்து, எல்லோருக்கும் பெரும் துக்கத்தை கொடுத்துள்ளது.
மருத்துவமனையில் நடிகை
இந்நிலையில் கதையில் ஆதி குணசேகரன் இடம் காலியாக இருக்க அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன மற்றும் கதையில் புதிய கதாபாத்திரம் வர இருப்பதை நேற்று முந்தைய எபிசோடிலேயே சில ஹின்ட் கொடுத்துள்ளார் இயக்குனர்.
மேலும் இந்த தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்து, வெயிட்டான முக்கியமான ரோல் என்றால் நந்தினி கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹரிபிரியா.
இவர் தற்போது திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ட்ரிப்ஸ் ஏற்றியபடி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை அவரே பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.