
நகைச்சுவை நடிகர் யோகி பாபு பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை கடைபிடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
குறுகிய காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவர், மண்டேலா, யானை முகத்தான், லக்கி மேன், பொம்மை நாயகி, போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்து வெற்றி கண்டார்.
மேலும், கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி நடிகர் யோகி பாபு இந்தி திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியிட்டுள்ளார். எனவே விரைவில் பாலிவுட்டிலும் நடிகர் யோகி பாபு களமிறங்கி விடுவார்.