சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பில் மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ பட நடிகர்கள்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் வடிவேலு. இவர்  சுமார் 250 படங்கள் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில்  சமீபத்தில் வெளியான மாமன்னன்  மற்றும் சந்திரமுகி2 திரைப்படங்கள்.

   

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான  படம் மாமன்னன் உதயநிதி ஸ்டாலின்,பகத் பாசில், வடிவில் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளிவந்த பிறகு பகத்  பாசில் மற்றும் வடிவேலு இருவரின் நடிப்பு ரசிகன் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது .

இந்நிலையில் மீண்டும் வடிவேல் மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.இதன் படப்பிடிப்பு அடுத்த வருட ஜனவரி மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க  நகைச்சுவை படமாக உருவாகும். இதை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது .