தளபதியை தொடர்ந்து.. சினிமாவை விட்டு விலகும் தல.. என்ன நடக்குது.? வருத்தத்தில் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். நீண்ட நாட்களாக அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு விடாமுயற்சி திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்கள். எனினும், அத்திரைப்படம் குறித்த எந்தவித அப்டேட்டுகளும் உடனுக்குடன் வெளிவருவதில்லை.

   

இந்நிலையில், இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான டைட்டில் வெளியாகிவிட்டது. அத்திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் இந்த இரண்டு திரைப்படங்களையும் நடித்து முடித்தவுடன் உலகம் முழுக்க பைக் சுற்று பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்காலிகமாக சில வருடங்கள் அவர் திரையுலகை விட்டு விலகி இருப்பார் என்றும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, தமிழ் திரை உலகில் டாப் நடிகராக வலம் வந்த தளபதி விஜய், அரசியலில் களமிறங்கி விட்டார். எனவே, அவர் கமிட்டான திரைப்படங்களை முடித்துவிட்டு முழுவதுமாக திரையுலகை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டார். இந்நிலையில், அவரை தொடர்ந்து தற்போது  அஜித்தும் திரையுலகையை விட்டு விலகவுள்ளதாக செய்தி பரவிக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.