
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர், தமிழ் திரையுலகில் ஆக்சன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, தனுஷின் ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் அவர்க்கு வெற்றி படங்களாக அமையவில்லை. எனினும் பொன்னியின் செல்வன் மூலமாக சமுத்திரகுமாரியாக மக்கள் மனங்களில் இடம் பிடித்து விட்டார்.
அதன்பிறகு, அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி புதிதாக range rover Evoque 2024 என்ற காரை வாங்கி இருக்கிறார். கேரளாவிலேயே முதல்முறையாக ஐஸ்வர்யா லட்சுமி தான் இந்த மாடல் காரை வாங்கி இருக்கிறாராம்.