பொன்னியின் செல்வன் பட புகழ் ஐஸ்வர்ய லட்சுமி கலக்கல் இன்ஸ்டா புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் செப்டம்பர்6 தேதி  1991 ஆம் ஆண்டு பிறந்தார்.

   

இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் மற்றும் திருச்சூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

2017 இல் எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ அறிவியல்  நிறுவனத்தில் தனது MBBS பட்டப்படிப்பை முடித்தார் . அங்கேயே தனது இன்டர்ன்ஷிப்பையும் முடித்தார்.

மலையாள திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். இவர் மாயாநதி ,வரதன்,விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அண்ணன் தினம்,போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘செயல்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ஜகமே தந்திரம் ,புத்தம் புது காலை விதியாதா,  கார்க்கி, கேப்டன் போன்ற பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறவில்லை.

2022 ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான,

‘பொன்னியின் செல்வன்’  படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவரின் கிளாமர் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.