கணவரின் பிறந்தநாளுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்து அசத்திய நடிகை ஆலியா மானசா… இப்படி ஒரு பரிசா?… சஞ்சீவ் வெளியிட்ட வீடியோ…

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். முதல் சீரியலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார்.

   

இதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் ஆல்யா, எப்போது நடிப்பால் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது இவர் தனது உடல் எடையை வெகுவாக குறித்து தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகர் சஞ்சீவ் இதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சஞ்சீவ்  தனது 34 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் பரிசாக நடிகை ஆலியா மானசா புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். தற்பொழுது இதனை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சஞ்சீவ். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)