தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சி… முதல் முறையாக கணவருடன் பங்கேற்ற அமலா பால்… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்…!

மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுடைய அதிக அளவில் பிரபலமான நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

   

அதன் பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த அவர், சமீபத்தில் தன் நீண்ட நாள் நண்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், தன் தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முதல் முதலாக தன் காதல் கணவருடன் பங்கேற்று இருக்கிறார் அமலாபால். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.