வெள்ளை புறா ஒன்று…. வெள்ள கலர் ட்ரெஸில் செம்ம அழகா இருக்கும் நடிகை அஞ்சலி….

நடிகை அஞ்சலி.., தெலுங்கு சினிமா படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

   

தான் நடித்த முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார்.

இந்த படத்திற்க்கு பின்னர் ‘அங்காடி தெரு’ நடிகை அஞ்சலியின் சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர். “எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

மேலும், நடிகர் சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டுப்போனார் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை கலர் ட்ரெஸ்ஸில் நடிகை அஞ்சலி பதிவிட்டுள்ள ஒரு அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஈர்த்துள்ளது.