விபச்சார வழக்கில் சிக்கி சின்னாபின்னமான நடிகை… மோசமான அனுபவங்கள்… புவனேஸ்வரியின் வேதனை பேட்டி…!

கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி நகைச்சுவை காட்சிகளிலும் கவர்ச்சி காட்டி பிரபலமானவர். இவர் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சில காட்சிகளில் நடித்தாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை புவனேஸ்வரி.

எனினும் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். எனினும் முதலில், விலை மாதுவாக நடிக்க தயங்கியுள்ளார். இயக்குனர் சங்கர், 4 ஆண்களுடன் சேர்ந்து நடித்தாலும் அவர்கள் உங்களை தொட மாட்டார்கள் என்று கூறிய பிறகே, நடிக்க சம்மதித்ததாக தெரிவித்திருக்கிறார்.

   

எனினும், இயக்குனர் சங்கர் கூறியது போன்றே அத்திரைப்படம் எனக்கு பெரிய அளவில் வரவேற்பை தந்தது. அதன் பிறகு, பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க பெரிது உதவியாக இருந்தது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்ததாவது, சரோஜாதேவி என்றால் ரொம்ப பிடிக்கும்.

அவரை போன்று சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், திரைப்படங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்த சமயத்தில், அரசியலில் ஈடுபட தொடங்கியதால் சிலர் சதி செய்து விபச்சார வழக்கில் தள்ளி விட்டனர். போராடி, அதனை பொய் என்று நிரூபித்து வழக்கிலிருந்து விடுபட்டுவிட்டதாக கூறியுள்ளார்.