அகோரி கெட்டப்பில் கலக்கும் ‘வேலைக்காரன்’சீரியல் நடிகை… நீங்களா இது… வைரலாகும் வீடியோ உள்ளே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் ‘வேலைக்காரன்’. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை திவ்யா கிருஷ்ணன். இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அருவி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை திவ்யா கிருஷ்ணன். இவர் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தினம் ஒரு திருக்குறள் என்று வீடியோவும் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூட இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடிகை திவ்யா கிருஷ்ணன் அகோரி ஆக மாறி சில புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். மகா சிவராத்திரி விழாவிற்கு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லத்தான் இப்படி அகோரி கெட்டப்பிற்கு மாறி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை திவ்யா கிருஷ்ணன்.

தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை திவ்யா கிருஷ்ணனா இது?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Divya Krishnan (@iamdivyakrishnan)