யாருடா நீங்க?.. வேற பொழப்பு இல்லையா?.. இரண்டாவது திருமணம் வதந்தியால் …கோபத்தில் நடிகை ஹரிப்பிரியா

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீத்து சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஹரிப்பிரியா, இவர் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து நடிகை ஹரிப்பிரியா லட்சுமி வந்தாச்சு ,பிரியமானவளே, கண்மணி, போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். 

   

நடிகை ஹரிப்பிரியா  வாணி ராணி தொடரின் புகழ் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது தற்போது இவர்களின் இவர்களுக்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக  விவாகரத்து செய்து கொண்டனர். 

தற்போது ஹரிப்ரியா வயதான ஒரு நபருடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். என்று ஒரு செய்தி யூடியூப் சேனலில் ஒன்றில் பதிவிட்டுள்ளனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிப்ரியா, யாருடா நீங்க எல்லாம்…? வேற பொழப்பே இல்லையா..? என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார்.