கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் விஜய் டிவி ஜாக்குலின்… நமக்கு இதெல்லாம் தேவையா?… கலாய்க்கும் ரசிகர்கள்… வீடியோ வைரல்…

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜாக்குலின். இவர் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார். இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

   

அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார். தேன்மொழி பி ஏ  சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை. அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து மிகவும் அழகாக உள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அடிக்கடி தனது அழகிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது இவர் கடுமையான ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘நமக்கு இதெல்லாம் தேவையா?’ என்று அவரை கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)