எழில் கொஞ்சம் இமயமலை… “நண்பர்களுடன் ட்ரக்கிங் சென்ற ஜோதிகா”… வைரல் புகைப்படங்கள்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவரை பெண் சிவாஜி என்று கூறலாம் அந்த அளவிற்கு நடிப்பில் கை சேர்ந்தவர்.

   

சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்தில் இவரின் நடிப்பை பார்த்து வியந்து போகாதவர்களே கிடையாது. இவர் ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மீண்டும் ரீ என்றி கொடுத்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி உள்ளிட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது குடும்பமாக மும்பையில் செட்டிலான ஜோதிகா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகா இமயமலைக்கு ட்ரக்கிங் சென்றிருக்கின்றார். தனது நண்பர்களுடன் அவர் சென்றிருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

ட்ரெக்கிங் பயணத்தின் போது நடந்த நிகழ்வுகள், அழகான மழை, நீர் தேக்கம் என ஒட்டுமொத்த இமயமலை அழகையும் அவர் அந்த வீடியோவில் வெளியிட்டு இருந்தார்.

சூர்யா இல்லாமல் தனது நண்பர்களுடன் அவர் ட்ரக்கிங் சென்ற வீடியோ மட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)