யார் இந்த குழந்தை நட்சத்திரம் தெரியுமா…? இவர் தான் சந்திரமுகி நடிகை..!

தமிழ் சினிமாவில் தாம் தூம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரெனோட்.  அதன் பின்னர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெ .ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை கதையான “தலைவி” என்ற படத்தில் நடித்தார். பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

   

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர் ஹிந்தி மற்றும்  தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இந்நிலையில் நேற்று ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் சிப்லிங்ஸ் டே கொண்டாடப்பட்ட நிலையில் பல பிரபலங்கள் அவர்களது சகோதர சகோதரிகளின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறினர்.

அந்த வகையில் நடிகை கொங்கணாவும் அவர் உடன்பிறந்தவர்கள் போட்டோவைை வெளியிட்டார். தன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு அதில்” சின்ன வயதில் டாம் அண்ட் ஜெர்ரி போல அடித்துக் கொண்டாலும்” தற்போது வளர்ந்த பிறகு தான் புரிகிறது சிப்லிங்ஸ் இருப்பது எவ்வளவு ஸ்பெஷல் என்று என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை கங்கணா தற்போது பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதில் ராகவா லாரன்ஸ் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.