உங்களுக்கும் இதே நிலைமை தானா…? தண்ணீர் வரத்து அதிகரிச்சுக்கிட்டே இருக்கு…. பெரு வெள்ளத்தில் சிக்கி மீண்ட எதிர்நீச்சல் கனிகா…!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி போட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை கனிகா தன் வீட்டை சுற்றிலும் வெள்ளம் புகுந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

   

அதனைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் அவரின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். இதற்கு நன்றி கூறி கனிகா வெளியிட்டிருக்கும் பதிவில், நாங்கள் மீட்கப்பட்டு விட்டோம். குடிநீர் இல்லை. மின்தடை ஏற்பட்டிருக்கிறது. தேங்கி நிற்கும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றது. வேறு வழியின்றி தவித்தோம். மீட்பு குழுவினருக்கும், அவர்களின் முயற்சிக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.