அந்த ஒரு விஷயத்திற்காக தான் தள்ளி போச்சி 43 வயதில் திருமணம் செய்த நடிகை கிளப்பிய பகீர்..

1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் சூரிய வம்சம். இப்படத்தில் சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை லாவண்யா தேவி. அதைத் தொடர்ந்து இவர் படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலிராமன், சமுத்திரம், வில்லன், அலை, திருமலை,கஜேந்திரன்,தங்க மகன் உள்ளிட்ட பல படங்களில்  நடித்திருக்கிறார்.2014 ஆம் ஆண்டு வரை நடித்தார். இவர் அதன் பிறகு நடிக்கவில்லை. தற்போது பத்து வருடங்கள் கழித்து ‘பகாசுரன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

   

அது மட்டும் இல்லாமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் ‘அருவி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் 43  வயது  வரை திருமணம் செய்து  கொள்ள வில்லை.இதை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில்  அவர் கூறியதாவது நான் திருமணம் செய்யாத காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலை தான் எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாத அடுத்தடுத்து வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன்.

என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாக தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் தான் என்னுடைய கணவரை ஒரு திருமண பங்க்ஷனில் சந்தித்தேன் அது நட்பாக தொடங்கி காதலாக மாறி இப்போது  கல்யாணத்தில் முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.