பிலாங்கின் ஒயிட் சரோஜா தேவியாக மாறிய எதிர்நீச்சல் ஜனனி இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்..

இன்றய காலத்தில்  வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.அந்த வகையில் சன்  தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலானது இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

   

இந்த சீரியலில் கனிகா,  பிரியதர்ஷினி,  ஹரிப்பிரியா இசை, பம்பாய் ஞானம், மதுமிதா   போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதில்  ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில்  வரவேற்பு பெற்றவர் நடிகை மதுமிதா. இவர் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல்  கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் கன்னட சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். ‘நம்பர் ஒன் கோடானு’ என்ற சீரியலில்  நடித்த அந்த தொடர் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில் , தமிழில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தற்போது பட்டு புடவையில்  பிளாக் and ஒயிடில் சரோஜா தேவி போல்  புகைப்படங்களை வெளிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.