‘தனிமை தான் நிரந்தரம்’… மனம் வெறுத்து வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரக்ஷிதா… இதுதான் காரணமா?..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இவர் மன அமைதிக்காக வேண்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் ரட்சிதா. ஆனால் இவர் தான் அவரை காதலிக்கவில்லை என்று பேட்டி ஒன்றில் சமீபத்தில் விளக்கம்  கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரக்ஷிதா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் விமானத்தில் தனியாக செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த பதிவில் ‘தான் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும்’ என்றும், ‘எப்பொழுதும் நம்முடன் யாரும் கடைசிவரை துணையாக இருக்கப் போவதில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அவரின் வைரல் வீடியோ….