”யாரெல்லாம் இந்த டிவியை பார்த்து இருக்கீங்க?”… ரொம்ப பழசா இருக்கும் போல… பிக் பாஸ் அனிதா வெளியிட்ட வைரல் வீடியோ…

மக்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் காரணத்தினால் அடிக்கடி யாராவது ஒருவர் இணையத்தில் திடீர் பிரபலமாவது உண்டு. அப்படி இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர்தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார்.

   

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார். இதன் மூலம் ஏற்பட்ட பிரபலம் காரணமாக அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

பிக் பாஸில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது இவர் youtube சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். அனிதா பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அனிதா சம்பத்.

இவர் தற்பொழுது தனது கணவரான பிரபா விண்டேஜ் ஐட்டம்ஸ் மீது மிகவும் ஆர்வமுள்ளவர் என்றும், அவர் பைக், ரேடியோ, வாட்ச் என பழங்காலத்து பொருட்கள் நிறைய  வாங்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதில் தற்பொழுது 1983 எல்லோரா டிவி மாடல் வாங்கி அதனை ப்ளே செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….