
90 களில் கொடிகட்டி பறந்த தமிழ் நடிகையான மீனா தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.
நைனிகா விஜய்யின் தெறி படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில், கடந்த 2022 -ஆம் வருடம் ஜூன் மாதம் மீனாவின் கணவரான வித்யாசாகர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து மீனா மறுமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற வதந்தி பலராலும் பரப்பப்பட்டது.
இது குறித்து நடிகை மீனாவே ஓபனாக ஒரு பேட்டியில் தெரிவித்ததாவது, நான் ஒரு பிரபலமான நடிகை என்பதாலேயே எனது மறுமணம் குறித்த வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது.
நான் இன்னும் எனது கணவரின் மறைவில் இருந்தே முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், எனது மறுமணம் குறித்த வதந்திகள் எனது குடும்பத்தையும் மிகவும் பாதிக்கிறது. மேலும் எனது மறுமணம் என்னை மட்டுமல்ல எனது மகளையும் சார்ந்தது. எனவே, நான் அதை பற்றி இப்போது சிந்திக்கவில்லை அவ்வளவுதான். இவ்வாறு அந்த பேட்டியில் நடிகை மீனா தெரிவித்திருந்தார் .