செல்ல குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை நயன்தாரா… வெளியான கியூட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த’ கனெக்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்பொழுது இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து ‘டெஸ்ட்’ திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

   

இவர்  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்கள் இருவரும். ஆனால் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த அவர்கள் தங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதை தொடர்ந்து இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர் தற்பொழுது தனது மனைவி நயன்தாரா தனது செல்ல குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும்  புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)