‘எத்தனை தடவை தான் எடுப்பீங்க’… ரிப்போர்ட்டரையே கிண்டல் செய்த நடிகை ஊர்வசி..

தென்னிந்திய சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக இவரது பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இதை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ளார்.

   

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஊர்வசி. இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து இவரது மகள் அப்பாவுடன் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி சிவப்பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்பொழுது குடும்பம், கேரியர் என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்பொழுது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக உள்ளார். இந்நிலையில் நடிகை ஊர்வசியை பொது இடத்தில் பார்த்த பொதுமக்கள் அவரை சூழ்ந்து ஒவ்வொருவராக போட்டோ எடுக்கின்றன.ர் இதனால் கடுப்பான ஊர்வசி ‘எத்தனை தடவை தான் எடுப்பீங்க?’ என்று அவர்களை பார்த்து கேட்கிறார். இது ரேஷன் கடையில் கொடுத்து சீனி வாங்கிக்கோங்க என்று அவர்களை கிண்டலும் செய்கிறார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மேலும் பலர் அருகில் வந்தவுடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

https://www.instagram.com/reel/CtYqTF5OZ1B/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==