தளபதி இன்று செய்ததை 20 வருடங்களுக்கு முன்பு அன்றே செய்த தல… பலரும் பார்க்காத அஜித்தின் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.

   

அந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சுமார் 1500 பேரை அழைத்து விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

அதேசமயம் எட்டு மணி நேரத்திற்கு மேலாக மேடையில் நின்று அவர்களுடன் சிரித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவரின் இந்த செயல் ரசிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாராட்டுக்களை பெற்றுள்ளது.

என்னதான் விஜய் லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் பக்காவாக பிளான் போட்டு தற்போது இந்த விழாவை நடத்தி முடித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் ரசிகர்கள் சமீப காலமாக மக்கள் இயக்கம் சார்பாக நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.

கல்விதான் முக்கியம் என்பதை விஜய இதன் மூலம் எடுத்துக் கூறுகிறார். இது ஒரு பக்கம் நல்ல கருத்துக்களை பெற்று வந்தாலும் மறுபக்கம் சிலர் அஜித் ரசிகர்களை சீண்டி வருகின்றனர்.

விஜய் மாணவர்களுக்கு உதவியதை தொடர்ந்து அஜித் என்ன செய்தார் என சில ரசிகர்கள் அஜித்தின் ரசிகர்களை கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அஜித் பள்ளி மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது நடிகர் அஜித் கணவர் 2004 ஆம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதேசமயம் பசுமை புரட்சியாக மரக்கன்றுகளையும் நட்டார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து அஜித்தின் ரசிகர்கள் தளபதி இன்று செய்ததை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே தல அஜித் செய்து விட்டார் என சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

தற்போது பலரும் பார்க்காத இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.