
நடிகை பூஜா ராமச்சந்திரன், எஸ் எஸ் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் திரைத்துறைக்கு வந்தவர். தொகுப்பாளினியான அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அதன் பிறகு திரைத்துரையில் அறிமுகமான அவர், பீட்சா, காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சயமான முகமானார். முதல் கணவரை விவாகரத்து செய்த இவர் பிறகு சார்பட்டா திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகரான ஜான் கொக்கையினை காதலித்து இரண்டாம் திருமணம் செய்தார்.
இவர்களுக்கு கடந்த மே மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ஆக்டிவாக இருக்கும் இத்தம்பதி, தங்கள் குழந்தையுடன் வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கடற்கரையில் கடலின் நடுவில் குழந்தையை வைத்துக்கொண்டு கவர்ச்சியான உடையில் பூஜா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் பச்சக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படியா உடை அணிவீர்கள்? என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.